தொண்டியில் தனியாக இருந்த மூதாட்டி அடித்துக் கொலை!
Alone old woman Died by beaten unknown
வீட்டில் தனியாக துாங்கிய மூதாட்டி மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பயத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி என்ற கிராமத்தில், தனியாக வசித்து வந்த மூதாட்டி, இரவில் தூங்கும் போது மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
கணவன் இறந்த பிறகு 30 ஆண்டுகளாக ஊரின் ஒதுக்குப்புறத்தில் வீடு கட்டி வசித்து வந்தவர் மூதாட்டி ஜெயசீலி (75). இவருக்கு இரண்டு மகன், மகள்கள் உள்ளனர். இவருடைய வீடு ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் வயல் பகுதியில் இருந்துள்ளது. ஆடு மாடு மேய்த்து அதில் வரும் வருமானத்தை வைத்து வாழ்ந்து வந்தார்.
நேற்று காலை அவரது இரண்டாவது மகன் குமார் பார்க்க சென்ற போது, உள்ளே ஜெயசிலி பலத்த காயத்துடன் ரத்தக்கரை சூழ இறந்து கிடந்துள்ளார்.
உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த மாவட்ட கண்காணிப்பாளர், சம்பவ இடம் முழுவதையும் பார்வையிட்டார். வீட்டில் உள்ள பொருட்கள் எதுவும் திருடப்படவில்லை. அப்படியே வைத்த இடத்தில் இருந்தப்படியே இருக்கிறது. மூதாட்டியின் நகைகள் எதுவும் திருடப்படவில்லை. தடவியல் நிபுணர்கள் கைரேகைகள் பதிவு செய்தனர் .
சம்பவம் குறித்து போலீசார்தெரிவிக்கையில், மூதாட்டி ஜெயசீலி குடும்ப பிரச்சினையின் காரணமாக தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அவர் அணிந்திருந்த நகைகள் எதுவும் திருடப்படவில்லை. உடல் மற்றும் தலை பகுதியில் கட்டையை வைத்து தாக்கியதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. இது குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரிக்கப்படும் என கூறினார்.
English Summary
Alone old woman Died by beaten unknown