கொடூர தமிழக போலீஸ் அதிகாரி பல்வீர்சிங் பணியிடைநீக்கம் - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
Ambasamuthiram ASP Suspend
நெல்லை : கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மூன்று இளைஞர்களை, போலீஸ் அதிகாரி ஏஎஸ்பி பல்வீர் சிங் கட்டிங் பிளேயர் கொண்டு பற்களை பிடுங்கி கொடுமைப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகார் அளித்தனர்.
இந்த விவகாரம் குறித்து இன்று முதல் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், விசாரணை கைதிகளின் பள்ளி பிடுங்கிய அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங்கை சஸ்பெண்ட் செய்து, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இன்றைய தமிழக சட்டப்பேரபையில் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர்சிங் விவகாரம் குறித்து அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.
இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்து பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், முழுமையான விசாரணை அறிக்கை வந்தவுடன் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.
மேலும், குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அரசியல் சார்பின்றி உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார்.
மேலும் சட்ட ஒழுங்கில் எந்த சமரசமும் இன்றி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், ஏஎஸ்பி பல்வீர் சிங்கை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
English Summary
Ambasamuthiram ASP Suspend