அம்பேத்கர் குறித்து அமித் ஷா சர்ச்சை கருத்து: தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்! - Seithipunal
Seithipunal


மாநிலங்களவையில் நேற்று நடைபெற்ற அரசியலமைப்பு மீதான விவாதத்தில், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என்று முழக்கமிடுவது தற்போது பேஷனாக மாறிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், "இந்த கிழி பயன்படுத்தும் போது கடவுளின் பெயரை இவ்வளவு முறை கூறினால், அந்த நபருக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்," என விமர்சித்தார்.

அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிராக, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். அவர்களது கோரிக்கை, மத்திய அமைச்சர் தனது கூற்று குறித்த மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதாகும்.

இந்நிலையில், திமுக தலைமை, அமித் ஷாவின் பேச்சை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. இன்று காலை 11.30 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் துவங்க இருப்பதாக திமுக தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amit Shah controversial comment on Ambedkar DMK protests across Tamil Nadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->