கஞ்சா கடத்திய வழக்கில் தலைமறைவான முதியவர் கைது! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மே 20ஆம் தேதி, மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, திண்டுக்கல்-திருச்சி சாலையில் சந்தேகத்துக்குரிய வகையில் வந்த ஆட்டோ மற்றும் காரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது கஞ்சா கடத்தல் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பாறைமேட்டு தெருவை சேர்ந்த சுப்பிரமணி (44), மது பாலாஜி (31), நாகல் நகரை சேர்ந்த மதன்குமார் (32), ரவுண்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் (22), வேடப்பட்டியை சேர்ந்த மாதவன் (23), மற்றும் கொசவபட்டியைச் சேர்ந்த ராஜா (24) ஆகியோர் அடங்குவர்.இவர்களிடமிருந்து மொத்தம் 30 கிலோ கஞ்சா, ஒரு ஆட்டோ, மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் மேலும் தொடர்புடையவராக குளித்தலைச் சேர்ந்த சுரேஷ்குமார் (45) கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்த வழக்கின் ஒரு முக்கிய குற்றவாளி தமிம் (63), சென்னை அய்யனார் புரத்தைச் சேர்ந்தவர், கடந்த 5 மாதங்களாக தலைமறைவாக இருந்தார். இதனால் திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் டி.எஸ்.பி முருகன் தலைமையிலான ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த குழுவில் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ், தலைமை காவலர்கள் பழனி முத்து மற்றும் செல்வகுமார் ஆகியோர் சேர்ந்தனர்.இந்த போலீஸ் குழுவின் முயற்சியால் தமிம் சென்னையில் பதுங்கி இருந்த இடத்தில் பிடிபட்டார். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கின் மூலமாக போலீசார் கஞ்சா கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய முன்னேற்றத்தை கண்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

An absconding old man was arrested in the case of smuggling ganja


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->