தீ விபத்தில் சிக்கிய யானை! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றக்குடி சண்முகநாதன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்களை வணங்கும் யானை (சுப்புலட்சுமி) உள்ளது . இந்த கோவிலுக்கு பக்தர் ஒருவரால் இந்த யானை வழங்கப்பட்டது என கூறப்படுகிறது. குன்றக்குடி மலை அடிவாரத்தில் இந்த யானையை பராமரிக்க தகர கொட்டாய் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திடீரென நேற்று நள்ளிரவில் இந்த கொட்டாயில் தீப்பிடித்து எரிந்தது. இந்த வெப்பத்தை  தாங்க முடியாமல் யானை பயங்கர சத்தத்துடன் பிளிறியது. ஒரு வழியாக யானை சங்கிலியை அறுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியே தப்பி ஓடி வந்துவிட்டது. கோவில் காவலாளி, பாகன் உள்ளிட்டோர் யானை பிளிறிய சத்தம் கேட்டு விரைந்து வந்து பார்த்தனர். அதற்குள் கொட்டாய் பெருமளவு எரிந்துவிட்டது. யானைக்கு பாதிப்பு ஏற்பட்டதா என்று பார்கையில், அந்த யானை சற்று தூரத்தில் நின்று கொண்டு இருந்தது.

இந்த சம்பவம் தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் அங்கு வந்து யானையை பார்வையிட்டனர் . ஆனால், அந்த யானையின் தும்பிக்கை, முகம், தலை, வயிறு, பின்பகுதி, வால் உள்ளிட்ட பகுதிகளில் பயங்கரமான தீக்காயங்கள் ஏற்பட்டு இருந்ததை கண்டனர். யானைக்கு உடனடியாக சிகிச்சை அளித்து தீக்காயத்திற்கு மருந்து போட்டனர்.

குன்றக்குடி போலீசார் இந்த சம்பவம் குறித்து  விசாரணை செய்தனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு எதாவது காரணமா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இதனை தொடர்ந்து யானைக்கு தொடர் சிகிச்சை அளித்தும், பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. கோவில் யானை தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை நிகழ்த்தியுள்ளது.மேலும், யானை சுப்புலட்சுமிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கோயில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

An elephant caught in a fire Death without treatment


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->