வழக்கிலிருந்து விலக முடியாது! வேணும்னா உச்ச நீதிமன்றம் போங்க!! திமுக தரப்பை அடித்து துவைத்த நீதிபதி! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கிலிருந்து திமுக அமைச்சர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என அனைவரையும் விடுவிப்பதாக மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பினை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து மறு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்து லஞ்ச ஒழிப்புத்துறை, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என் அனைவரும் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தலைமையிலான அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்த போது தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதியே இந்த வழக்கினை விசாரிப்பதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

அதேபோன்று தாமாக முன்வந்து மறு விசாரணைக்கு எடுக்கும் வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே எந்த நீதிபதி விசாரணை நடத்துவது என்பது குறித்து முடிவெடுப்பார் என வாதங்கள் முன்வைக்கப்பட்டது. 

அதற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தான் எடுக்கும் ஒவ்வொரு வழக்கையும் தலைமை நீதிபதியின் அனுமதி பெற்று மறு விசாரணைக்கு எடுப்பதாகவும், எந்த வழக்கின் விசாரணையில் இருந்தும் தான் விலகப் போவதில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

வேண்டுமென்றால் நான் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என காட்டுமாக திமுக அமைச்சர்கள் தரப்புக்கு பதிலடி கொடுத்தார். இதனை அடுத்து ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு பிறப்பித்த நோட்டீஸ் மீது கால அவகாசம் வழங்கி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மீதான வழக்கின் விசாரணையை நவம்பர் 2ம் தேதிக்கும், அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான வழக்கின் விசாரணை நவம்பர் 9ஆம் தேதிக்கும் தள்ளி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AnandVenkatesh said cannot withdraw from case retrial dmk ministers


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->