செய்தியாளரின் அந்த ஒரு கேள்வி! கொந்தளித்த அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். 

அதில், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தான் எடுக்க முடியும், மாநில அரசு எடுக்க முடியாது என்று திமுக கூறி வருவது பற்றி உங்களின் பதில் என்ன என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர்.

இதற்க்கு பதிலளித்த அன்புமணி இராமதாஸ், "அப்போ பீகாரில் எப்படி எடுத்தார்கள்? பீகார் மாநிலத்தில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து, மாநிலத்தில் 60 சதவீத இட ஒதுக்கீட்டை 70 சதவீத இட ஒதுக்கீட்டாக உயர்த்திருக்கிறார். 

அவரால் எப்படி செய்ய முடிந்தது? சாதிவாரி கணக்கெடுக்கும் போது 19 குறியீடுகளை எடுத்துள்ளார்கள். யார் யார் பிற்படுத்தப்பட்ட சமுதாயம், தாழ்த்தப்பட்ட சமுதாயம், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயம், அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள், அவர்களுக்கு வீடு இருக்கிறதா, வாடகை வீட்டில் இருக்கிறார்களா, எத்தனை பட்டதாரிகள் இருக்கிறார்கள், எவ்வளவு நிலம் வைத்துள்ளார்கள், எத்தனை பேர் படிக்கவில்லை என்று 19 குறியீடுகளை வைத்து எடுத்துள்ளார்கள். 

இதில், ஒரு லட்சத்து 86 ஆயிரம் குடும்பங்களின் மாத வருமானம் 6 ஆயிரம் ரூபாய் குறைவாக இருக்கிறது என்று சாதிவாரி கணக்கெடுப்பில் தெரியவந்தது.

அந்த ஒரு லட்சத்து 86 ஆயிரம் குடும்பங்களுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, அவர்களை முன்னேற்றியுள்ளார் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார். 

இதுதான் சமூக நீதி. இந்த சாதிவாரி கணக்கெடுப்பிற்கு பாட்னா உயர்நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. இது சரிதான் என்கிறது அந்த உயர் நீதிமன்றம்.

இதில் இவர்கள் (திமுகவினர்) தந்தை பெரியாரின் வாரிசு, சமூக நீதி எங்கள் மூச்சு... ஏதாவது சொல்லிவிட போகிறேன். திமுக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியதுதானே? இட ஒதுக்கீட்டை கொடுக்க வேண்டியதுதானே? எதுக்கு நீங்கள் சமூக நீதிப் பற்றி பேசுகிறீர்கள்?" என்று ஆவேசமாக அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anbumani Ramadoss Condemn to DMK Govt for Caste Census


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->