அவசரமாக டெல்லி புறப்படும் ஆளுநர் ஆர்என் ரவி! அண்ணாமலையும் டெல்லி பயணம்! - Seithipunal
Seithipunal


ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். சட்டப்பேரவையில் இன்று ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கலாக உள்ள நிலையில், ஆளுநர் டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளிக்காமல், மீண்டும் மசோதா தாக்கல் செய்து அனுப்புமாறு தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி இருந்தார்.

ஆளுநர் தரப்பில் மசோதாவை திருப்பி அனுப்புவதற்கு முக்கிய காரணமாக, இந்த ஆன்லைன் சூதாட்டம் தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே திமுக எம்பி கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய அமைச்சர், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்ற ஒரு தகவலை தெரிவித்து இருந்தார்.

இதனை அடுத்து இன்று தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மீண்டும் மசோதா தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த நிலையில், தமிழக ஆளுநர் இரண்டு நாள் பயணமாக டெல்லி புறப்படுகிறார். இதற்கிடையே பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையும் இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா ஆகியோரை நேரில் சந்திக்கும் அண்ணாமலை, பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச உள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே திட்டமிட்டபடி வருகிற 26 ஆம் தேதி அண்ணாமலை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது முன்கூட்டியே டெல்லிக்கு புறப்படுகிறார் அண்ணாமலை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai And RN Ravi delhi program


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->