#BigBreaking| 200 கோடி லஞ்சம்! அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு பரபரப்பு பதில்! - Seithipunal
Seithipunal



தமிழக அரசு தரப்பில் தற்போது முக்கியமான ஒரு செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு தளவாடங்கள் வாங்கியதில் எந்த ஒரு ஊழலும், முறைகேடும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஆல்ஸ்டம் நிறுவனத்துக்கு சாதகமாக ஸ்டாலின் நடந்து கொண்டதாக அண்ணாமலையின் புகாருக்கு தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தை பொறுத்தவரை தமிழக அரசு மற்றும் மத்திய அரசு நிறுவனம் இணைந்து செயல்படக்கூடிய நிறுவனமாக இயங்கி வருகிறது. இதில் 15 சதவீதம் மத்திய அரசின் பங்கு உள்ளது.

இந்த மெட்ரோ நிர்வாகத்தின் ஆல்ஸ்டம் நிறுவனத்திற்கு எந்தவித சலுகையும் காட்டப்படவில்லை என்று தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ரயில் பெட்டிகளை வாங்குவதற்காக எந்தவித சலுகையும் தரப்படவில்லை.  ஷெல் நிறுவனத்தை இதில் இழுப்பதும் தவறானது என்று அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலையின் குற்றச்சாட்டிற்கு முதல் முறையாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai DMK Files TN Govt Explain


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->