வைரமுத்து மீதான பாலியல் புகார் விவரம்! முதல்வர் ஸ்டாலினை கோர்த்துவிட்ட அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், கவிஞர் வைரமுத்து குறித்து நீங்கள் கூறிய பாலியல் புகார் விவரங்களை அளிக்க முடியுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, "நான் எதற்கு அந்த விவரங்களை தர வேண்டும்? நான் என்ன காவல்துறையா? எனக்கு கிடைத்த தகவல் வைரமுத்து மீது 19 பாலியல் புகார் உள்ளது.

முதலமைச்சர் அவர்கள் வைரமுத்துவை வீட்டுக்கு கூப்பிட்டு, பாட்டு பாட சொல்லுவதை நிறுத்திவிட்டு, போலீஸ் கமிஷனரை கூப்பிட்டு வைரமுத்து மீது எத்தனை வழக்கு இருக்கிறது என்று கேட்டால், கமிஷனர் சொல்லப் போகிறார். 

நான் எதற்கு சொல்ல வேண்டும். முதல்வர் தான் வைரமுத்துவை வீட்டில் கூப்பிட்டு வைத்து திராவிட மாடலை புகழ்ந்து பாடுங்கள், என்னை பற்றி பாடுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். வைரமுத்து பாடிக் கொண்டிருக்கிறார். 

எத்தனை புகார் இருக்கிறது உளவுத்துறையை கூப்பிட்டு கேட்டால் ஐந்து நிமிடத்தில் விவரங்கள் வரப்போகிறது. எனவே வைரமுத்து மீது புகார் இருக்கிறது. 

வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றது முதல் தமிழ்நாடு வரை இருக்கிறது. நான் எதற்கு வைரமுத்துவை பாலியல் குற்றவாளி என்று சொல்லவில்லை. அவர் மீது பாலியல் புகார் உள்ளது என்று தான் கூறுகிறேன்.

வைரமுத்து மீதான ஒரு பாலியல் புகாரை கூட விசாரிக்காமல், இன்று சம்பந்தமே இல்லாமல் டெல்லியில் நடக்கக்கூடிய மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் என்று பேசிக் கொண்டிருக்கிறார். இதில் என்ன நியாயம் இருக்கிறது" என்று அண்ணாமலை தெரிவித்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai Say About vairamuthu issue DMK MKStalin


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->