திமுகவினரின் சொத்து பட்டியல் - சிபிஐ விசாரணை! பீதியை கிளப்பும் அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


சித்திரை ஒன்றான இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டு உள்ளார்.

இதில், டிஆர் பாலு, கனிமொழி, ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் துரைமுருகன், கே என் நேரு, வேலூர், அன்பில் மகேஷ், உதயநிதி ஆகியோரின் கோடி கணக்கான  சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டு உள்ளார்.

ஜெகத்ரட்சகன் - ரூ.50 ஆயிரம் கோடி
எ.வ.வேலு - ரூ.5 ஆயிரம் கோடி
கே.என்.நேரு - ரூ.2,495 கோடி
கனிமொழி- ரூ.830 கோடி
கலாநிதிமாறன் - ரூ.12 ஆயிரம் கோடி
டிஆர் பாலு - ரூ.10 ஆயிரம் கோடி
துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் - ரூ.579 கோடி
கலாநிதி வீராசாமி - ரூ.2,923 கோடி
பொன்முடி மற்றும் கவுதம் சிகாமணி - ரூ.581 கோடி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ. ஆயிரம்  கோடி
உதயநிதி - ரூ.2 ஆயிரம் கோடி
சபரீசன் - ரூ.902 கோடி 
ஜி ஸ்கொயர் வருமானம் - ரூ.38 ஆயிரம் கோடி
திமுக கட்சியின் சொத்து மதிப்பு - ரூ.1,408 கோடி
மொத்தம் ரூ.1,343,170,000,000 கோடி 
 

மேலும், தான் வாங்கிய ரஃபேல் வாட்ச் குறித்த விவரங்களையும் அண்ணாமலை சற்று முன்பு வெளியிட்டுள்ளார். அத்ரக்கான ரசிதையும் செய்தியாளர்கள் முன்பு அண்ணாமலை காண்பித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, 2011-ல் ஸ்டாலினுக்கு லஞ்சமாக ரூ.200 கோடி ஆல்ஸ்டாம் கம்பெனி மூலம் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் அது தேர்தல் நிதி செலவிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் பங்கு இருப்பதால், இதனை சிபிஐ இயக்குனரிடம் நானே நேரடியாக புகார் அளிக்க உள்ளேன். .

மேலும், ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தில் வரும் 2024 க்குள் தமிழகத்தில் ஆட்சி செய்த அனைத்து கட்சிகளின் சொத்து பட்டியலையும், அவர்கள் செய்த ஊழலையும் அம்பலப்படுத்துவேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai Say DMK File CBI Inquiry


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->