ரூ.4400 கோடி 'ஹிஜாவு' மோசடியில் ஸ்டாலின்! ஆருத்ரா மோசடியில் அண்ணாமலை! அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி குற்றச்சாட்டுகள்!
Annamalai Say HIJAU scam Stalin RS Bharati DMK Files
'ஆருத்ரா நிறுவனத்திடம் ரூ.84 கோடி நான் பெற்றுக் கொண்டதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை மீது ஆர்.எஸ் பாரதி சுமத்தியதற்காக ரூ.501 கோடி இழப்பீடாக அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் 84 கோடி ரூபாய் நான் பெற்றுக்கொண்டதாக ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டை என் மீது சுமத்தியுள்ளார்.
என் மீதும், பாரதிய ஜனதா கட்சியின் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை பொதுவெளியில் வைத்ததற்கு, ரூபாய் 500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடாக கோருகிறேன். இதை நான் PM Cares நிதிக்கு செலுத்த விரும்புகிறேன்.
4400 கோடி ரூபாய் மோசடி செய்த ஹிஜாவு நிதி நிறுவனத்தின் உரிமையாளர்களை, 2021ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சந்தித்து, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 25 லட்ச ரூபாய் நன்கொடை பெற்றுக்கொண்ட புகைப்படம் ஒன்றை, சமூக வலைத்தளத்தில் நான் பார்த்தேன்.
100 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு இந்த நிதி மோசடியில் முக ஸ்டாலின் நேரடியாக சம்மந்தப்பட்டுள்ளார் என்று நான் குற்றச்சாட்டு வைக்கலாமா என்றும், ஆர்.எஸ்.பாரதியிடம் கேள்வி எழுப்புகிறேன்?
அடுத்த 48 மணி நேரத்தில், என் மீதும் எனது கட்சியின் மீதும் சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்காவிட்டால், திரு ஆர்.எஸ்.பாரதி மீது தகுந்த வழக்கு மிகப் பணிவன்புடன் தொடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், நீங்கள் அனுப்பிய சட்ட அறிக்கைக்கு பதிலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்தமைக்கு இழப்பீடு கோரும் சட்ட அறிக்கையும் உங்களை விரைவில் வந்து சேரும்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
English Summary
Annamalai Say HIJAU scam Stalin RS Bharati DMK Files