அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா - திமுக அரசை சாடும் அண்ணாமலை.!
annamalai speech about dmk govt in en man en makkal yatra
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும்`என் மண், என் மக்கள்’ என்ற யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். அதன் படி திருவண்ணாமலையில் யாத்திரை மேற்கொண்டு வந்த அண்ணாமலை பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:- ”தமிழ்நாட்டில் இளைஞர்களின் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. வேலைக்கு ஏற்ற ஊதியமும் இல்லை. தண்ணீரின்றி விவசாயம் பொய்த்துப்போனது.
நீராதாரத்தைப் பெருக்க திமுக அரசு முயற்சிக்கவில்லை. லஞ்சம், ஊழல், குடும்ப ஆட்சி மற்றும் அடாவடியை அகற்றுவதே இந்த யாத்திரையின் நோக்கம். தமிழ்நாட்டில் தரமான கல்வி கிடைப்பதில்லை. அரசுப் பள்ளிகளில் தரம் இல்லாமல் உள்ளன. தனியார் பள்ளிகளில் உள்ள கட்டமைப்பு வசதிகள், அரசுப் பள்ளிகளில் இல்லை. அரசுப் பள்ளிகளுக்கு திமுக அரசு மூடுவிழா நடத்துகிறது.
அரசுப் பள்ளிகளில் 11,000 வகுப்பறைகள் பற்றாக்குறையாக உள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. உலகத் தரம் வாய்ந்த கல்வியை பிரதமர் மோடி கொடுக்கிறார். நாடு முழுவதும் நவோதயா பள்ளிகள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஒரு நவோதயா பள்ளி கூட இல்லை. நவோதயா பள்ளி வரவிடாமல் திமுக அரசு தடுக்கிறது.
பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் ஜவ்வாதுமலையில், மத்திய அரசின் ஏகலைவா பள்ளியைத் தொடங்க அனுமதிக்கவில்லை. இதேபோல, பிஎம்சி திட்டத்தின் கீழ் பள்ளியை தொடங்கவும் அனுமதிக்கவில்லை” என்று பகீரங்கமாக குற்றம்சாட்டினார்.
English Summary
annamalai speech about dmk govt in en man en makkal yatra