தமிழகத்தின் அரசியல் மாற்றம்... கோவை - அண்ணாமலை நெகிழ்ச்சி பேச்சு.! - Seithipunal
Seithipunal


கோவை விமான நிலையத்தில் பா. ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, 

கோயம்பத்தூர் பாராளுமன்ற தொகுதியை பொருத்தவரை 3 வேட்பாளர்களுக்கு இடையே நடக்கும் போட்டி இல்லை. தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு கோவையில் பணமழை பொழியும். 

கோவை உலக அளவில் சிறந்து விளங்கும். தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் வளர்ச்சி வர வேண்டும். தமிழகத்தில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றி பெற்ற ஆட்சி அமைக்கும். 

பிரதமர் தமிழகத்திற்கு ஏன் அடிக்கடி வருகிறார் என்றால் வெற்றி பெறும் எம்.பிகள் மூலம் தமிழகத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு தமிழகத்தை மாற்றி காட்டுவோம். 

கோவை தொகுதியில் கோடிக்கணக்கான ரூபாய் கொண்டு வந்து செலவு செய்கிறார்கள். ஆனால் நான் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டேன். 

கடந்த தேர்தலின் போது அறிவித்த அதே அறிக்கையை தி.மு.க வெளியிட்டுள்ளது. அதில் எதையும் அவர்கள் நிறைவேற்ற போவதில்லை. 

கோவை மக்களை நம்பி அவர்களுடன் சேர்ந்து இரண்டு ஆண்டுகளில் இந்த மாற்றம் தமிழகத்தில் எடுத்துச் செல்லும் சாதாரண நபர் நான் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai speech viral


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->