தமிழகத்தில் சரத்குமாரை அடைத்துவைக்க விரும்பவில்லை: அண்ணாமலை பேச்சு.!
Annamalai speech viral
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வருகின்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என சரத்குமார் தெரிவித்திருந்தார்.
தொகுதி பங்கீடு தொடர்பாக பா.ஜ.கவுடன் சமத்துவ மக்கள் கட்சி பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில் இன்று சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.கவுடன் இணைத்தார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சரத்குமார் பா.ஜ.கவுடன் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் சரத்குமாரை அடைத்து வைக்க பா.ஜ.க விரும்பவில்லை எனவும் அவர் தேசத்திற்கு தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.