Krishna Janmashtami 2024: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு!
Announcement of special buses on the occasion of Krishna Jayanti!
வருகிற 23-ந்தேதி (சுப முகூர்த்த தினம்), 24 (சனிக்கிழமை), 25 (ஞாயிற்றுக் கிழமை) மற்றும் 26-ந்தேதி (கிருஷ்ணஜெயந்தி) வருகிறது. இதில் 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் 485 பஸ்களும், 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 60 பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் 70 பஸ்களும், மாதவரத்திலிருந்து 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் 20 பேருந்துகளும் இயக்கப்பட இருக்கிறது. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 350 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
English Summary
Announcement of special buses on the occasion of Krishna Jayanti!