கள்ளச்சாராயம்! சேஷாசமுத்திரம் சாராய டீலர்! மீண்டும் ஒரு சாராய வியாபாரி கைது! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் மேலும் ஒரு சாராய வியாபாரியை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த 19ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்து  60க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதிக மெத்தனால் கலக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் காவல்துறை தீவிரமாக இறங்கி உள்ளது. கல்வராயன் மலை அதை சுற்றி உள்ள பகுதிகளில் காவல்துறை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சேஷாசமுத்திரத்தை சேர்ந்த சின்னதுரையிடம் அதே பகுதியை சேர்ந்த சாராய வியாபாரி ராமன் என்பவர் வேலு என்பவரிடம் பாக்கெட் சாராயம் வாங்கி விற்பனை செய்தது சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து சிபிசிஐடி அதிகாரிகள்  நேற்று சேஷசமுத்திரம் சென்று அங்கிருந்து வேலுவை கைது செய்தனர். தொடர்ந்து அவரை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதன் மூலம் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Another liquor dealer arrested in Kallakurichi liquor case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->