ஊழல் ஒழிப்புப் பிரிவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மம்தா! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ், அம்மாநிலத்தில் ஊழல் ஒழிப்புப் பிரிவு ஒன்றை தொடங்கி உள்ளார். 

இதற்கு அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

நேற்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'ஊழல் ஒழிப்புப் பிரிவு' அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இதில் லஞ்சம், ஊழலுக்கு எதிரான புகார்களை பொதுமக்கள் அனுப்பலாம் என்றும் ஆளுநர் அறிவித்தார்.

இந்த ஊழல் ஒழிப்புப் பிரிவு குறித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவிக்கையில், "ஊழல் ஒழிப்புப் பிரிவு என்று ஒன்றை ஆளுநர் உருவாக்கியுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இது செய்வது ஆளுநர் மாளிகையின் வேலை இல்லை. நாங்கள் ஆளுநர் மீது மரியாதை வைத்துள்ளோம்.ஆனால், அவர் தன்னிச்சையாக ஒரு பிரிவை உருவாக்கி இருப்பது மாநில அரசின் நிர்வாகத்திலும், உரிமையிலும் தேவையில்லாமல் தலையிடும் செயலாகும்.

பா.ஜ.க.வின் உத்தரவுகளுக்கு இணங்க ஆளுநர் முகமூடியை அணிந்துகொண்டு செயல்படுவதை ஏற்க முடியாது. 

அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநருக்கான பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இது அவரின் பனி இல்லை. அவருக்கு கல்வித் துறையில் எந்த அனுபவமும் இல்லை" என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 Anti Corruption Unit CV Anand Bose vs Mamata


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->