அதானி ஊழலை விசாரிக்க இன்று வரை ஸ்டாலின் அனுமதி கொடுக்கவில்லை - அறப்போர் இயக்கம் கடும் விமர்சனம்!
Arappor Iyakkam Reply to Wed DMK Members for Adani Scam
திமுக ஆட்சியில் அறப்போர் புகாரை விசாரிக்க முகாந்திரம் உள்ளது என்று கடிதம் எழுதிய லஞ்ச ஒழிப்புத் துறை அந்த புகாரை வழக்கு பதிவு செய்து விசாரிக்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அனுமதியை ஒரு வருடத்திற்கு முன்பாக கேட்டது.
ஆனால் இன்று வரை ஸ்டாலின் அதானி ஊழலை விசாரிக்க அனுமதி கொடுக்கவில்லை. விசாரணைக்கு அனுமதி கொடுக்கும் வரை பல்வேறு வகையில் கோரிக்கை வைத்து அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கும் என்று அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.
அதிமுக ஆட்சியில் அதானி செய்த ஊழலுக்கு திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்க அறப்போர் கோரிக்கை வைப்பது நியாயமா..? என்று இணைய திமுகவினர் எழுப்பிவரும் கேள்விகளுக்கு அறப்போர் இயக்கம் அளித்துள்ள பதிலின் விவரம் பின்வருமாறு:
அறப்போர் புகார் கொடுத்தது 2018ம் வருடத்தில். அதே வருடத்தில் வள்ளுவர் கோட்டத்தில் மக்களை திரட்டி அதானி ஊழல் மீது நடவடிக்கை எடுக்க கோரி அறப்போர் இயக்கம் போராட்டம் நடத்தியது. அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து அதானி ஊழல் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக அரசுக்கு அழுத்தம் கொடுக்க கோரிக்கையும் வைக்கப்பட்டது.
ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து அதிமுக ஆட்சி முடியும் வரை அதானி மீது வழக்கு தொடர அறப்போர் இயக்கம் கோரிக்கை வைத்து வந்தது.
2021 தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் அவர்கள், நான் ஆட்சிக்கு வந்தால் அதிமுக ஊழல்களை விசாரித்து தவறு செய்தவர்களை சிறையில் அடைத்து விடுவேன் என்று ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்தார். ஆட்சிக்கு வந்து முதல்வராக பதவியேற்றார்.
3 வருடங்களும் கடந்து விட்டது. திமுக ஆட்சியில் அறப்போர் புகாரை விசாரிக்க முகாந்திரம் உள்ளது என்று கடிதம் எழுதிய லஞ்ச ஒழிப்புத் துறை அந்த புகாரை வழக்கு பதிவு செய்து விசாரிக்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அனுமதியை ஒரு வருடத்திற்கு முன்பாக கேட்டது.
ஆனால் இன்று வரை ஸ்டாலின் அதானி ஊழலை விசாரிக்க அனுமதி கொடுக்கவில்லை. விசாரணைக்கு அனுமதி கொடுக்கும் வரை பல்வேறு வகையில் அறப்போர் இயக்கம் கோரிக்கை வைத்து அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கும் என்பதை கொந்தளிக்கும் இணைய திமுகவினருக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
அறப்போர் இயக்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டியது தானே என்று இன்னொரு கோஷ்டி கொந்தளிக்கிறுது. இப்படித்தான் முன்னாள் அமைச்சர் வேலுமணி கூட்டாளிகள் செய்த டெண்டர் செட்டிங் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வலியுறுத்தி அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கொடுத்த காலக் கெடு தாண்டி பல மாதங்கள் ஆன பிறகும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
திமுகவின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஊழல்கள் மீது திமுக அரசை நடவடிக்கை எடுக்க வைக்க அறப்போர் இயக்கம் போராடிக் கொண்டு இருக்கிறது. இது இணைய திமுகவினருக்கு அவமானமாக இல்லையா? அல்லது திமுகவும் அதிமுகவும் ஒண்ணு அதை நம்பாதவன் வாயில் மண்ணு என்ற கூற்று உண்மையா? என்பதை அந்த இணைய திமுகவினர் முடிவுக்கே விட்டு விடுகிறோம் என்று அறப்போர் இயக்கம் பதிலடி கொடுத்துள்ளது.
English Summary
Arappor Iyakkam Reply to Wed DMK Members for Adani Scam