ஒகேனக்கனலுக்கு போறீங்களா?...பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால், கடந்த சில நாட்களாக கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.

மேலும்  தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட  நிலையில், கடந்த வாரம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

அந்தவகையில் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், கடந்த வாரத்தில் 17 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக அங்கு உள்ள  மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வார விடுமுறையை முன்னிட்டு  ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர்.

இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால், இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Are you going to hokenakkal public works officials shock information


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->