விநாயகர் சதுர்த்திக்கு நீங்க ஊருக்கு போறீங்களா?......தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, சென்னை சென்டிரல் - கோவை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , சென்னை சென்டிரல் - கோவை சிறப்பு ரெயில் வரும் 6ம் தேதி  சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு திருவள்ளுவர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இரவு 8.28 மணிக்கு சேலம் வந்தடையும் என்றும், இங்கிருந்து 8.30 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக 11.45 மணிக்கு கோவை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மறுமார்க்கத்தில் கோவை - சென்னை சென்டிரல் சிறப்பு ரெயில் வரும்  8-ம் தேதி கோவையில் இருந்து 11.30 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக இரவு 1.47 மணிக்கு சேலம் வந்தடையும் என்றும், இங்கிருந்து 1.50 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளுவர் வழியாக மறுநாள் காலை 7.35 மணிக்கு சென்னை சென்டிரல் சென்றடையும் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Are you going to town for Vinayagar Chaturthi Southern Railway special train announcement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->