ஜனநாயக நாட்டில் அறப்போராட்டம் நடத்த உரிமை இல்லையா? அர்ஜூன் சம்பத் ஆவேச கேள்வி..! - Seithipunal
Seithipunal


கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு இந்து முன்னணி சார்ப்பில் அறபோராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணியின் சார்பில் நடத்தபட்ட இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சாரத்தின் நிறைவு விழாவில் இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில தலைவரும் சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் உரையாற்றினார்.
அப்போது, ஸ்ரீரங்கத்தில் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள் என சர்ச்சைகுரிய வகையில் பேசினார்.

அவர் பேசிய வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், அவரை கைது செய்ய பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்து வந்தது. தந்தை பெரியார் கழகம் சார்பில் சென்னை கமிஷனர் அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த தலைமறைவாக இருந்த அவரை தேடி வந்தனர. புதுவையில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறபோராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டதற்கு அர்ஜூன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்து முன்னணி பேரியக்கம் ஜனநாயக முறையில் நடத்திய அறப்போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்லாயிரக் கணக்கானோர் தமிழகம் முழுவதும் கைது! இந்த  அடக்குமுறையை கண்டிக்கிறேன்!  

ஜனநாயக நாட்டில் அறப்போராட்டம் நடத்த உரிமை இல்லையா? கைது செய்யப்பட்டுள்ள இந்து முன்னணி தொண்டர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுகிறேன். 
திமுக அரசாங்கத்தின் அராஜகம் தொடர்ந்தால் இந்து மக்கள் கட்சியும் போராட்டத்தில் ஈடுபடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவிக்கப்படுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arjun Sambath Twitter Post


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->