கோபத்தில் தாய் வீட்டுக்குச் சென்ற மனைவி - மனஉளைச்சலில் ஆயுதப்படை போலீசார் செய்த விபரீதம்.! - Seithipunal
Seithipunal


கோபத்தில் தாய் வீட்டுக்குச் சென்ற மனைவி - மனஉளைச்சலில் ஆயுதப்படை போலீசார் செய்த விபரீதம்.!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி அருகே பெருமாத்தூரான் பகுதியைச் சேர்ந்தவர் வீரசேகரன். இவர் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இவருக்கும், பண்ருட்டி அருகே மருங்கூரை சேர்ந்த கவிப்பிரியா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது கவிப்பிரியா ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் இருவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினையினால் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்தத் தகராறில் கவிப்பிரியா கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான வீரசேகரன், நேற்று காலை தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வீரசேகரனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு மருத்துவமனை சார்பில் தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் படி போலீசார் விரைந்து வந்து வீரசேகரனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Armed Police sucide in cuddalore


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->