ஆம்ஸ்ட்ராங் கொலை: அதிர்ச்சியான சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட சிபிசிஐடி போலீசார்!  - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கூடுதல் சிசிடிவி காட்சிகளை, சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து தாக்கும் காட்சி மற்றும் அவரைக் கொல்ல நோட்டமிட்ட சிசிடிவி காட்சிகளில், தற்போது போலீசாரால்  கைதானவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஏற்கனவே இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை என்று விசிக, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி உள்ளிட்டவர்கள் குற்றம் சட்டி இருந்தனர்.

மேலும், ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டது, உண்மைக் குற்றவாளிகளை தப்ப வைப்பதற்கான திமுக அரசின் நாடகம் என்று சீமான் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியில் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் போலீசாரால் வெளியிடப்பட்டுள்ளது.

எங்கிருந்து வருகிறார்கள், எப்படி ஸ்கெட்ச் போடுகிறார்கள் என்பதெல்லாம் இந்த சிசிடிவி காட்சியில் இடம்பெற்றுள்ளது. மேலும், ஒவ்வொருவரின் பெயரையும் போலீசார் இந்த காணொளியில் விவரத்துடன் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும் இந்த கொலை விவகாரத்தில் மூளையாக செயல்பட்டது யார்? தூண்டியது யார் என்ற கேள்விக்கு போலீசார் விசாரணைக்கு பின்னே தெரியவரும்.

இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சரண் அடைந்தவர்களில் ஒருவரான திருவேங்கடம் இன்று அதிகாலை மாதவரம் அருகில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தி உள்ளதாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Armstrong Case Chennai Police CCTV


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->