ஆம்ஸ்ட்ராங்க் கொலை: ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில், போலீசார் சொன்ன அதிரவைக்கும் தகவல்கள்!
Armstrong Case Thiruvengadam encounter Chennai Police info
சென்னை பெரம்பூா் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ஆம் தேதி இரவு அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இந்த படுகொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 11 போரையும் பரங்கிமலையில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் குற்றவாளிகள் கொடுத்த தகவலின்படி, பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை கைப்பற்ற, ரவுடி திருவேங்கடத்தை இன்று அதிகாலை காவல் துறையினர் மாதவரம் பகுதிக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
அப்போது, பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து போலீசாரை திருவெங்கடம் தாக்க, போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே பலியாகினார்.
இந்நிலையில், காவல்துறை தரப்பில் இந்த என்கவுண்டர் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், கொலையாளிகளில் ஒருவரான திருவேங்கடத்தை, விசாரணைக்காக போலீசார் இன்று காலை புழல் நோக்கி அழைத்துச் சென்றுள்ளனர்.
மாதவரம் ஆட்டுத்தொட்டி அருகே செல்லும் போது திருவேங்கடம் தப்பி ஓடியுள்ளார். கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு அவரை தேடும் போது, புழல் வெஜிடேரியன் நகரில் உள்ள தகர கொட்டாயில் திருவேங்கடம் பதுங்கி இருந்துள்ளார்.
போலீசார் சுற்றி வளைக்கும் போது, ஏற்கனவே அங்கு பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து திருவேங்கடம் சுட்டுள்ளார். இதனை அடுத்து காவல் ஆய்வாளர் திருவேங்கடத்தை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், வயிறு மற்றும் மார்பில் குண்டு பாய்ந்துள்ளது.
மாதரவத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். திருவேங்கடம் பதுங்கியிருந்த தகர கொட்டாயில்தான் ஆம்ஸ்ட்ராங் கொலைச் சதி திட்டமிடப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
English Summary
Armstrong Case Thiruvengadam encounter Chennai Police info