ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி கைது!
Armstrong murder case main culprit arrested
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவ வழக்கில் முதல் கட்டமாக, மறைந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடி புதூர் அப்பு டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல நாட்டு வெடிகுண்டுகளை ரவுடி அப்பு சப்ளை செய்தவர் என்று கூறப்படுகிறது.
இதன் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யபட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 28 ஆக உயர்ந்துள்ளது.
English Summary
Armstrong murder case main culprit arrested