அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி-யின் முடியை பிடித்து தாக்குதல் - 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டுநர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி நடந்த போராட்டத்தில், டிஎஸ்பி மீது தாக்குதல் நடந்துள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம், பெருமாள் தேவன்பட்டியை சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுனர் காளிக்குமார் (வயது 33) மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இன்று காலை காளிக்குமார் வாகனத்தை தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், வாகனத்தை மறித்து, காளிக்குமாரை சரமாரியாக வெட்டியது. 

இதில் படுகாயம் அடைந்த காளிக்குமாரை மீட்டு, மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, அவரின் உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், காளிக்குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கேட்டு மருத்துவமனையில் குவிந்த அவரின் உறவினர்கள், அருப்புக்கோட்டை - திருச்சுழி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமத்துவ இடத்திற்கு விரைந்து வந்த அருப்புக்கோட்டை டிஎஸ்பி. காயத்ரி போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு,  டிஎஸ்பி காயத்ரி மீது போராட்டக்காரர்கள் சிலர் தாக்குதல் நடத்தி, பதிலுக்கு போலீசாரும் தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. பின்னர், தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . இதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aruppukottai Police DSP Attacked Protest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->