சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!
Asani Cyclone 9 ports warning
சென்னை கடலூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை புயலாக மாறும் என்றும், இதனால் டெல்டா மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது.
இந்த நிலையில் புயல் உருவாக்குவது குறித்து மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இன்று மாலை உருவாகும் புயல் ஆந்திரா மற்றும் ஒடிசா நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
English Summary
Asani Cyclone 9 ports warning