கள்ளத்தொடர்பு தகராறு.! கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட ஜோதிடர்..! நாமக்கல்லில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் கள்ளத்தொடர்பு தகராறில் ஜோதிடர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் கொண்டமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜோதிடர் சுந்தர்ராஜன் (60). இவரது மனைவி பேபி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுந்தர்ராஜன் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

இதையடுத்து நேற்று திடீரென சுந்தர்ராஜன் வீட்டில் நிர்வாணமாக உடல் சரிந்த நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுந்தர்ராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், சுந்தர்ராஜனுக்கும் அதே பகுதியை சேர்ந்த 50 வயதுடைய பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பெண் வேலைக்குச் சென்றபோது கொண்டமநாயக்கன்பட்டியில் தறிபட்டறை நடத்தி வந்த கார்த்திக் (23) என்பவருடன், அந்தப் பெண்ணுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த சுந்தர்ராஜன் கார்த்தியிடம் அந்தப் பெண்ணுடனான கள்ளத்தொடர்பை கைவிடும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் சுந்தர்ராஜனை கத்தியால் குத்தி கொன்று இருக்கலாம் என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் பதுங்கி இருந்த கார்த்திகை கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Astrologer stabbed to murder for illegal affair problem in namakkal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->