காலையிலேயே அரசு பேருந்து மீது தாக்குதல்.. தமிழகத்தில் பதற்றம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று 2வது நாளை எட்டியுள்ள நிலையில் சில மாவட்டங்களில் பேருந்து சேவை முடங்கியுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழக அரசு தற்காலிக ஓட்டுனர்களை வைத்து பேருந்துகளை இயக்கி வருகிறது.

இந்நிலையில் முதல் நாளான நேற்று தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கிய சில பேருந்துகள் விபத்துக்குள்ளான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சில பகுதிகளில் அரசு பேருந்துகள் மீது தாக்குதல் சம்பவமும் நடைபெற்றது. குறிப்பாக வேலூர் மாவட்டம் கருக்கம்பத்தூர் அருகே அரசு பேருந்து மீது தாக்குதல் நடத்தியதில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்து. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தற்காலிக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கே.வி குப்பம் அருகே குடியாத்தத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது  தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னிகுப்பம் பகுதியை அரசு பேருந்து கடந்து சென்ற போது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அரசு பேருந்து மீது கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். 6 பயணிகளுடன் வந்த அரசு பேருந்து மீதி கல் வீசப்பட்டதில் பேருந்து முன் பக்க கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கே வி குப்பம் போலீசார் மர்ம நபர்களை தேடிவருகின்றனர் தேடிவருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

attack on govt bus in vellore


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->