மிளகாய் பொடி தூவி... மருமகனை அறிவாளால் வெட்டிய பெண் வீட்டார்.! ஈரோட்டில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் மிளகாய் பொடி தூவி மருமகனை அறிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், திகினாரை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் கார்த்திக். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஜோதி என்பவரும், பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஜோதியின் குடும்பத்தினர், நேற்று இரவு விக்னேஷ் கார்த்திக்கின் வீட்டிற்கு சென்று, கார்த்திக் மீது மிளகாய் பொடி தூவி அவரை அறிவாளால் வெட்டியுள்ளனர்.

இதையடுத்து கார்த்திக்கின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்துள்ளனர். இதைப் பார்த்த ஜோதியின் தந்தை-தாய் மற்றும் பதினோராம் வகுப்பு படிக்கும் சகோதரன் ஆகிய மூன்று பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து பலத்த காயமடைந்த கார்த்திக் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மூன்று பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Attempt to kill son in law with sickle after sprinkling chili powder in erode


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->