ஜன.20 முதல் மீண்டும் போராட்டம்.!! தமிழக அரசுக்கு தொழிற்சங்கம் எச்சரிக்கை.!!
atu announced bus Strike again from jan20
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டதை அடுத்து அந்த வழக்கின் விசாரணை இன்று காலை முதல் நடைபெற்றது. அப்போது நீதிமன்றத்தின் ஏற்று ஜனவரி 19ஆம் தேதிவரை வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கங்கள் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளன.
இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக அருந்து கொண்ட பிறகு ஜனவரி 19ஆம் தேதி போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நடத்தப்படும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் போக்குவரத்து தொழிலாளர்களின் 6 கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளை நிறைவேற்றப்பட்டுள்ளத. மேலும் 2 கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஜனவரி 20ஆம் தேதி முதல் மீண்டும் வேலை நிறுத்த நடைபெறும் என அண்ணா தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. ஜனவரி 19 நடைபெறும் முத்தரப்பு பேச்சு வார்த்தையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ஜனவரி 20ஆம் தேதி முதல் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்எனவும், நாளை முதல் அண்ணா தொழிற்சங்கத்தினர் பணிக்கு செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து தொழிற்சங்கரின் போராட்டம் தற்காலிக முடிவுக்கு வருகிறது.
English Summary
atu announced bus Strike again from jan20