முற்றிப்போன வெறி! நர்சிங் மாணவிக்கு நேர்ந்த கொடுமை! ஆட்டோ டிரைவர் கைது! - Seithipunal
Seithipunal


ஆண்டிபட்டி: நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 21 வயது நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் அழகு முருகன் (34) மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவி, மதுரை தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் 4ம் ஆண்டு படித்து வருகிறார். ஆயுதபூஜை விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்த மாணவி, மீண்டும் கல்லூரிக்கு செல்ல, தனியாக ஆட்டோவில் ஆண்டிபட்டி பஸ்நிலையம் நோக்கி பயணித்தார். 

ஆட்டோ டிரைவர் அழகு முருகன், கிராமத்தை ஒட்டிய டி.ராஜகோபாலன்பட்டி விலக்கு பகுதியில், ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஆட்டோவை நிறுத்தி, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி தப்பி ஓட முயன்றபோது, மிரட்டியுள்ளதாகவும் புகார் உள்ளது. 

மாணவி தப்பி, தன் பெற்றோரிடம் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து, ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

போலீசார் நடத்திய விசாரணையில், புகாரின் அடிப்படையில் ஆட்டோ டிரைவர் அழகு முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Auto driver arrested for sexually harassing nursing student


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->