ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
auto rate hike chennai hc order to tngovt
பெட்ரோல் டீசல் விலைக்கு ஏற்றவாறு ஆட்டோ கட்டணங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
உக்ரைன் - ரஷ்ய போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தற்போது இந்தியாவில் பெட்ரோல் -டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை டீசல் விலை 100 ரூபாயையும், பெட்ரோல் விலை 110 ரூபாய் நெருங்கியுள்ள நிலையில், ஆட்டோ உரிமையாளர்களும், பயணிகளும் பயனடையும் வகையில் ஆட்டோ கட்டணங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
பெட்ரோல் -டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.
ஆட்டோ மீட்டர் செயல்பாட்டைக் கண்டறிய வேண்டும் என்றும், போக்குவரத்து துறை மற்றும் போலீசார் சோதனை நடத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
auto rate hike chennai hc order to tngovt