அய்யர்மலை ரோப் கார் பழுது.... எல்லாத்துக்கும் காரணம் ஆடிமாத காத்துதான்? - Seithipunal
Seithipunal


 கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ரத்தினகிரீஸ்வரர் கோவில், அறநிலையத்துறை கட்-டுப்பாட்டில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து, 1,117 அடி உயரத்தில் உள்ளது; கடந்த   
24ல் ரோப் கார் சேவையை முதல்வர் ஸ்டாலின் காணொலியில் தொடங்கி வைத்தார். 
 ரோப் கார் சேவை தொடங்கிய மறுநாளே பழுதாகி பாதியில் நின்றது. இரண்டு மணிநேரப் போராட்டத்திற்குப் பின் பக்தர்கள் மீட்கப்பட்டனர்.

இது குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில்,  இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் பக்தர்களுக்கு  பார்க்கிங் வசதி, கழிப்பிட வசதி எதையும் ஏற்படுத்தி தரவில்லை.  திமுக ஆட்சியில் தான் 1.60 கோடி செலவில் அய்யர் மலைக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டது .

அனைத்து விதமான பரிசோதனைகளுக்குப் பிறகே  ரோப் காரை இயக்கினோம், ஆனால்  ஆடி மாதம் என்பதால் 36 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால்,  ரோப் கார் வீல் நழுவியது.  உடனே துரிதமாக செயல்பட்டு   ரோப் காரில் இருந்த பயணிகளை டெக்னீசியன்கள் பத்திரமாக மீட்டனர்.  ரோப் காரை பரிசோதிக்க அமைக்கப்பட்டுள்ள குழு சோதனை மேற்கொள்ள இருக்கிறது.

எதிர்காலத்தில் அசம்பாவிதத்தை தவிர்க்க ரோப்  கார் புறப்படும் இடத்திலும் , சென்று அடையும் இடத்திலும் காற்றின் வேகத்தை கண்காணிக் கருவி  அமைக்கப்பட்டு கண்காணிக்க படவுள்ளது. இதேபோல் பழனியிலும் சில சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது  அங்கு செயல்படுத்தப்படும் திட்டத்தை அய்யர் மலைக்கும்  கொண்டுவர திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayyarmalai Rope Car Repair.... Is it all because of waiting?


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->