வாய்க்காலில் மிதந்த ஆண் சடலம் - கடலூரில் சோகம்..!  - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள  திட்டக்குடி அடுத்த கோழியூர் கிராமத்தில் வெல்லிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து செல்லும் பாசன வாய்க்காலில், ஆன் குழந்தை ஒன்று தொப்புள்கொடியுடன் சடலமாக மீட்கப்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்ததனார். 

அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பிறந்த குழந்தையை பாசன வாய்க்காலில் வீசி சென்றதால் இறந்ததா? அல்லது இறந்த குழந்தையை பாசன வாய்க்காலில் வீசி சென்றனரா? என்று பல கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். 

மேலும், அந்த கிராம மக்கள் யாரும் குழந்தையை வீசினார்களா? என்றும், வேறு கிராமத்தில் இருந்து பாசன வாய்க்காலில் குழந்தை வீசப்பட்டு தண்ணீரில் அடித்து வரப்பட்டதா என்றும் விசாரித்து வருகின்றனர். 

இதற்கிடையே, போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று உடற்கூறாய்வு செய்து வருகின்றன. இந்த இடத்தில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிறந்து சில நாட்களேயான பெண் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

baby body rescue in cuddalore


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->