ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறப்பு - வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு.!
baby born to 9th class student in coimbatore
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் அருகே இளம்பெண் ஒருவர் பிரசவ வலியுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
ஆனால், பிரசவமான பெண் சிறுமி போல் இருந்ததால் அவரது வயதை மருத்துவர்கள் விசாரித்ததில் சிறுமிக்கு 16 வயது மட்டும் ஆவது தெரிய வந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் படி போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில், 9-ம் வகுப்பு படித்து வந்துள்ள அவரும், அதே பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் அங்குள்ள கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்துள்ளனர். இதையடுத்து மாணவி கோபாலகிருஷ்ணன் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.
இதற்கிடையே மாணவி கர்ப்பம் ஆனதால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில், மாணவிக்கு திடீரென வயிறு வலி வந்ததைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரசவம் நடந்தது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் குறித்து மகளிர் போலீசார் கோபால கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்ய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
baby born to 9th class student in coimbatore