ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை -செவிலியர்களுக்கு வாழ்த்து..! - Seithipunal
Seithipunal


 நாகை மாவட்டத்தில்  108 ஆம்புலன்சில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. நள்ளிரவில் நேரத்திற்க்கு ஏற்ப செயல்பட்ட செலிவியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

நாகை மாவட்டம், திருமருகல் அருகே ஆணடித்தோப்பைச் சேர்ந்தவர் சிவக்குமார், வயது 36. இவரது மனைவி அமுதா,வயது 30. இவர்களுக்கு ஐந்து மற்றும் மூன்று வயதில் பெண் குழந்தைகள் உள்ளனர். நிறை மாத கர்ப்பிணியான அமுதாவுக்கு, நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டதால் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நள்ளிரவு, 1.30 மணிக்கு சென்றுள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவ ஊழியர்கள், மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்த பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து நள்ளிரவு, 1.45 மணிக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் புறப்பட்டனர். டிரைவர் இளங்கோவன், வயது 48, ஓட்டினார்.

ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் நித்யா, வயது 25, ஆம்புலன்ஸ் செவிலியர் ரம்யா,வயது 26, ஆகியோர் முதலுதவிக்காக அமுதாவுடன் சென்றனர். திட்டச்சேரி அடுத்த கொந்தகை என்ற இடம் அருகே குழந்தை பிறப்பதற்கான அறிகுறி இருந்ததால், வாகனத்தை சாலையோரம் நிறுத்தி, செவிலியர்கள் பிரசவம் பார்த்தனர்.

நள்ளிரவு, 2:00 மணிக்கு அமுதாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், தாய், சேயை நாகை மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.நள்ளிரவில் ஆள் அரவமற்ற பகுதியில் நேரத்திற்கு ஏற்ப செயல்பட்டு, இரண்டு உயிர்களை காப்பாற்றி, பாதுகாத்த செவிலியர்கள் நித்யா, ரம்யாவிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Baby boy born in ambulance - Congratulations to the nurses..!


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->