பச்சிளம் குழந்தை விற்பனை! அரசு மருத்துவமனை,கிளினிக் ஆகிய இடங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை! - Seithipunal
Seithipunal


குழந்தை விற்பனை விவகாரம் குறித்து அரசு மருத்துவமனை மற்றும் பெண் டாக்டர் கிளினிக் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருச்செங்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் மகப்பேறு அரசு மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் அனுராதா. இந்தநிலையில், குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக அனுராதா மற்றும் புரோக்கர்கள் உட்பட மூன்று பேர் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

தமிழரசி என்னும் தனியார் மருத்துவமனையில் அனுராதா அறைகள் மற்றும் நாமக்கல் ரோட்டில் உள்ள அவரது சொந்தமான மருத்துவமனை மற்றும் கிளினிக் ஆகிய இடங்களில் அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். குழந்தை  விற்பனையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர் அணுராதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமனிலில் வெளியே வந்தார்.

இந்த நிலையில் அனுராதா பணியாற்றி வந்து திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மற்றும் அனுராதாவுக்கு சொந்தமான நாமக்கல் ரோட்டில் உள்ள கிளினிக் உள்ளிட்ட பகுதியில் சீல் வைக்கப்பட்ட அறைகளை சீலை அகற்றி அங்கு இருந்து ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

குழந்தை விற்பனையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? மேலும் குழந்தைகள் விற்கப்பட்டுள்ளதா? என்பது குறித்த கேள்விகளுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர். தற்போது குழந்தை விற்பனை விவகார வழக்கை  மீண்டும் அதிகாரிகள் கையில் எடுத்து தொடர்ந்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Baby sale Officials conducted surprise raids at government hospitals and clinics


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->