பத்ம விருது 2025 - செஃப் தாமோதரனுக்கு பத்ம ஸ்ரீ விருது.!
badhma sri award to chef damodharan
2025 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது.
அந்த பட்டியலில் 7 பேருக்கு பத்ம விபூஷண், 19 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 113 பேருக்கு பத்ம ஸ்ரீ உள்பட மொத்தம் 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் அஜித்குமார், நடிகை சோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி உள்ளிட்டோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தெலுங்கு திரைப்பட நடிகரான நந்தமூரி பாலகிருஷ்ணாவுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த சமையல்கலை அறிஞர் செஃப் தாமுவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம விருது பெறுபவர்களை நாட்டின் குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
English Summary
badhma sri award to chef damodharan