ஏழை,எளிய பிள்ளைகளும் பேட்மிண்டன் விளையாடிய வைப்பதே என் நோக்கம்! நீண்ட நாள் கனவு! ஒருநாள் நிச்சயமாக நனவாகும் - மருத்துவர் அன்புமணி ராமதாஸ்! - Seithipunal
Seithipunal


பாமக தலைவரும் இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் துணைத் தலைவரும், தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கத்தின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் அவர்கள் சென்னை அடுத்த சேலையூரில் மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டியை இன்று தொடங்கி வைத்தார்.

அண்டர் -17 ரங்கிங் மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி தொடக்க விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுடன் இயக்குனர் லிங்குசாமி கலந்து கொண்டார். பின்னர் பேசிய தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கத்தின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டு வீராங்கனைகள் இந்தியாவிற்காக விளையாடி பெருமை சேர்க்க வேண்டும்.

தமிழ்நாட்டு வீரர்கள் இந்தியாவுக்காக உலக அளவில் தங்கம் பதக்கங்களை வெல்ல வேண்டும். இதுதான் என்னுடைய ஆசை. தமிழ்நாட்டில் இந்தியர்கள் இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்பதை நீண்ட நாள் கனவு. ஒருநாள் நிச்சயமாக நனவாகும்.

தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கத்தின் தலைவராக நான் பொறுப்பேற்று ஏழு ஆண்டுகள் ஆகிறது. என்னுடைய நோக்கமே ஏழை எளிய பிள்ளைகளும் பேட்மிண்டன் விளையாடிய உலக அளவில் சாதனை படைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.

தமிழ்நாட்டில் 38 மாவட்டங்கள் இருக்கின்றது. அவற்றை 50 மாவட்டமாக பிரிக்க வேண்டும். சிறியதாக இருந்தால் தான் நிர்வாகம் சிறப்பாக இருக்கும். அதிகாரிகளும் சிறப்பாக செயல்படுவார்கள். காலநிலை மாற்றங்கள் உலகம் எங்கும் நிகழ்ந்து வருகிறது. காலநிலை மாற்றதால் வெப்பத்தின் அளவு அதிகரித்து வீசுகிறது. 

தமிழ்நாட்டில் இருக்கும் ஏழை எளிய மாணவர்களும் பேட்மிண்டன் விளையாட வேண்டும்.  அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பேட்மிண்டனும் விளையாட வேண்டும். தமிழக வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவிற்காக தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Badminton Association President Anbumani Ramadoss inaugurated the state level Badminton tournament


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->