ஆம்ஸ்ட்ராங் படுகொலை: நாளை சென்னை வருகிறேன் - அமைதி காக்க மாயாவதி வேண்டுகோள்!
Bahujan Samaj Party Mayawati say about Armstrong hacked to death
நேற்று இரவு பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை வழக்கில் எட்டு பேர் சரணடைந்துள்ளனர்.
கடந்த வருடம் படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் என்பவரின் தம்பி புன்னை பாலா உள்ளிட்ட எட்டு பேர் இந்த கொலையை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ளது. பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை காரணமாக மருத்துவமனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில கட்சித் தலைவரும், கடின உழைப்பாளியும், அர்ப்பணிப்புள்ள தலைவருமான கே. ஆம்ஸ்ட்ராங் நேற்று மாலை அவரது சென்னை இல்லத்திற்கு வெளியே கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மிகவும் கவலையளிக்கும் இந்த சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, ஆம்ஸ்ட்ராங்கிற்கு அஞ்சலி செலுத்தவும், துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும் நாளை காலை சென்னை செல்ல திட்டமிட்டுள்ளேன். எனவே அனைவரும் அனைவரும் அமைதி காக்க வேண்டும்" என்று மாயாவதி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு அரசு விரைந்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் என நம்புகிறேன். ஆம்ஸ்ட்ராங்-ஐ பிரந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கு ராகுல் காந்தி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
English Summary
Bahujan Samaj Party Mayawati say about Armstrong hacked to death