தமிழகத்தில் வரும் 9 ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை - பாலச்சந்திரன் தகவல்.!
balachanthiran allounce new air pressure in tamilnadu
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29 தேதி முதல் தொடங்கி தற்போது தீவிரமடைந்து வருகிறது. இதனால், சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழையும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது.
பருவமழையின் காரணமாக, கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் வரும் 6ம் தேதி வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், வங்கக் கடலில் நவம்பர் 9-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால், தஞ்சை, திருவாரூர், நாகை, தூத்துக்குடி திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இந்நிலையில், நவம்பர் 9-ம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, 10 மற்றும் 11-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி திசையை நோக்கி நகரக்கூடும். காற்றழுத்தத்தின் நகர்வு வலிமை குறித்து தொடர்ந்து கண்காணித்து தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
balachanthiran allounce new air pressure in tamilnadu