திருவாரூர் மாவட்டத்தில் ட்ரான்கள் பறக்கத் தடை - காரணம் என்ன?
ban on drone camera fly in thiruvarur
திருவாரூர் மாவட்டத்தில் நாளை டிரோன் கேமரா பறக்கத் தடை வித்தித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

"தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாகை மாவட்டத்திற்கு வருகை தருகிறார். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு இன்று, நாளை உள்ளிட்ட இரண்டு நாட்கள் திருவாரூர் மாவட்டத்தில் முக்கிய விருந்தினர்கள் செல்லும் வழித்தடத்தை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.
இந்த உத்தரவை மீறி இந்த வழிதடத்தில் சிவில் ரிமோட் பைலட் விமான அமைப்பு மற்றும் டிரோன் கேமரா போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது" என்றுத் தெரிவித்தார்.
English Summary
ban on drone camera fly in thiruvarur