மதுரையில் கைது செய்யபட்ட வங்கதேச வாலிபர் - போலீசார் தீவிர விசாரணை.!!  - Seithipunal
Seithipunal


மதுரையில் கைது செய்யபட்ட வங்கதேச வாலிபர் - போலீசார் தீவிர விசாரணை.!! 

மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று முன் தினம் வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு சந்தேகப்படும் நிலையில் சுற்றித் திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 

அதில் அந்த வாலிபர் வங்கதேசத்தில் உள்ள போக்ரா மாவட்டத்தினை சேர்ந்த கரிமுல்லா என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இந்தியாவில் தங்கியிருப்பதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாமால் இந்திய வரைபடம் மட்டும் வைத்திருந்ததால், அவர் தீவிரவாதியாக இருக்க கூடும் என்று போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது.

அதனால், அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், அந்த வாலிபர் வங்கதேசத்திலிருந்து வேலை தேடி மேற்கு வங்க மாநிலத்தின் வழியாக சாலை மார்க்கமாக வந்ததும், அவர் எதிர்பார்த்தபடி வேலை கிடைக்காததால் கோயில்தலங்களுக்கு சென்றால் இலவச உணவும், தங்குமிடமும் கிடைக்கும் என்று இந்திய வரைபடத்தை வைத்து, அதில் கோயில் நகரங்களை பார்த்து சென்று வந்தததும் தெரிய வந்துள்ளது.

முதலில், ஐதராபாத் சென்ற அந்த வாலிபர் பின்னர் அங்கிருந்து மதுரை வந்து, திருப்பரங்குன்றத்தில் உள்ள கோயில் மண்டபங்களில் தங்கியிருந்து நாட்களை கழித்துள்ளார் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bangaladesh man arrested in madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->