சென்னையை உலுக்கிய சம்பவம்.. 3 பேர் பலியான வழக்கில் பார் உரிமையாளர் விடுவிப்பு.!! - Seithipunal
Seithipunal


சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் பாரி 2 நாட்களுக்கு முன்பு மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும், மணிப்பூரை 2 வட மாநில தொழிலாளர்களும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் பார் மேலாளரை கைது செய்திருந்தனர். மேலும் பார் உரிமையாளர் அசோக் குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். 

அவர் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று இரவு அபிராமிபுரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். சரண் அடைந்த அசோக்குமாரிடம் போலீசார் சுமார் ஆறு மணி நேரம் விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக அசோக்குமாரிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கத்தைப் பெற்ற பின் காவல் நிலைய ஜாமினில விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் தனது விளக்கத்தில் மெட்ரோ ரயில் பணி தொடங்கியதில் இருந்து கட்டிடத்தில் அதிர்வுகள் ஏற்பட்டதாகவும், இது தொடர்பாகஇரண்டு முறை மெட்ரோ ரயில் பணி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே மெட்ரோ ரயில் பணி நிர்வாகம் சிஎம்டிஏ கட்டிட உறுதி தன்மை அளித்த அதிகாரி ஆகியோருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில் மூன்று பேர் பலியானது தொடர்பாக 25 நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bar owner released in 3 person death case in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->