மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டரில் முற்றுகை போராட்டம் - அமைப்பினரை கைது செய்ததால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டரில் முற்றுகை போராட்டம் - அமைப்பினரை கைது செய்ததால் பரபரப்பு.!

பிரபல இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, நடித்த திரைப்படம் 'மாமன்னன்'. இந்தத் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. ஆனால், இந்தத் திரைப்படத்தில் இருவேறு தரப்பினரிடையே வன்முறையை தூண்டும் விதமாக கதை அமைந்திருப்பதாக கூறி முக்குலத்தோர் எழுச்சி கழகத்தினர் மற்றும் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினர் உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

மேலும், இந்தப் படத்தை திரையிடக் கூடாது என்றும் கூறி மதுரையில் சுவரொட்டி ஒட்டியிருந்தனர். இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'மாமன்னன்' திரைப்படம் இன்று வெளியானது. 

இதையறிந்த நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினர் மற்றும் முக்குலத்தோர் எழுச்சி கழகத்தினர் திரைப்படத்திற்கு எதிராகவும், இயக்குநர் மாரி செல்வராஜுக்கு எதிராகவும் கோஷமிட்டு மதுரை கோபுரம் திரையரங்கம் முன்பு கூடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே திரையரங்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸார் விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பினரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதனால் மதுரையில் இன்று காலையிலேயே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

besiegers arrested for protest against mamannan movie in madurai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->