பள்ளிகள் திறப்பு : கல்வியில் மாணவர்கள் சாதிக்க வாழ்த்துக்கள் - மருத்துவர் அன்புமணி!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மாணவர்கள் கல்வியில் சாதிக்க வேண்டும் என்று கூறிவுள்ளார்.

தமிழ்நாட்டில் வருடாவருடம் மே மாதம் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறையை விடப்படுவது வழக்கம். கோடை விடுமுறையை முடிந்து பள்ளிகள் ஜூன் 6ம் தேதி திறக்கப்படும் என்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவித்தது. வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளி திறப்பை ஜூன் 10ம் தேதி மாற்றவேண்டும் என பாமக நிறுவனர் அறிக்கை வெளியீட்டு இருந்தார்.

மாணவர்கள் நலன்கருதி பள்ளிகள் ஜூன்10ம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்தநிலையில், ஜூன் 10ம் தேதியான இன்று தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பட்டுள்ளது. இந்தநிலையில், பள்ளி திரும்பும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் எனவும் கல்வியில் சாதனை படைக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் அவர் கூறிவுள்ளதாவது ,


தமிழ்நாட்டில் கோடைக்கால விடுமுறை முடிவடைந்து அரசு பள்ளிகள் மற்றும் மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள் இன்று மீண்டும்  திறக்கப்படுகின்றன.  ஆசிரியர்களையும்,  நண்பர்களையும் மீண்டும்  சந்திக்கும் மகிழ்ச்சியில் பள்ளி திரும்பும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும்  எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க்கையில் முன்னேறுவதற்காக ஏணி கல்வி தான். அதை உணர்ந்து மாணவர்கள் நன்கு கற்று  சாதனை படைக்க வேண்டும். மாணவர்கள் அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய அரசு பள்ளிகளில்  அனைத்து ஆசிரியர் காலியிடங்களையும் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இவ்வாறு கூறிவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Best wishes to students for academic achievement Dr Anbumani


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->