பவானிசாகர் அணையில் திறக்கப்பட்ட நீர் சிறிது நேரத்தில் நிறுத்தம்.!! காரணம் என்ன.? - Seithipunal
Seithipunal


பவானிசாகர் அணையில் இருந்து நேற்று கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதன் அடிப்படையில் நேற்று நீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கீழ்பவானி கால்வாயில் கரையை பலப்படுத்துவதற்கான தடுப்புச் சுவர் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. 

ஆகஸ்ட் 15ஆம் தேதி நன்செய் பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நேற்று மாவட்ட ஆட்சியர் வினாடிக்கு 100 கன அடி நீர் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்ட சிறிது நேரத்தில் நிறுத்தப்பட்டதால் மதகு பகுதியில் தோவப்பட்ட மலர்கள் அணையின் வாய்க்காலிலேயே மிதந்தன. 

கட்டுமான பணிகள் இன்னும் 4 நாட்களில் நிறைவடைந்த பிறகு அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கீழ்பவானி வாய்க்காலில் கட்டுமான பணி நிறைவடையாத நிலையில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீர் சிறிது நேரத்தில் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அமைச்சர்கள் வராமல் மாவட்ட ஆட்சியர் நீர் திறந்தது காரணமா? அல்லது கட்டுமான பணி காரணமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bhavanisagar dam water release was stopped immediately


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->