130 சவரன் நகை திருட்டில் திடீர் திருப்பம்... உரிமையாளரின் அலட்சியத்தால் அலைக்கழிக்கப்பட்ட போலீஸ்..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் 130 சவரன் நகை கொள்ளை போனதாக வந்த புகாரால் பரபரப்பு..!!

சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த சரவணன் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு வீட்டில் உள்ள பீரோவில் வைக்க மட்டும் இருந்த சுமார் 130 சவரன் நகை கொள்ளை போனதாக புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் உட்பட 20க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. 

வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்தனர், இந்த விசாரணையில் நகை கொள்ளை போனதற்கான எந்த தடயங்களும் கிடைக்காதால் வீட்டின் உரிமையாளர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து போலீசார் நகை வைக்கப்பட்டு இருந்த பீரோவை மீண்டும் சோதனை செய்தனர். அப்பொழுது ரகசிய அறைக்கு உட்புறமாக உள்ள பீரோவில் பக்கவாட்டிற்கு இடைப்பட்ட இடுக்கில் நகை தவறி விழுந்து கிடப்பது தெரியவந்தது.

வீட்டின் உரிமையாளர் நகை விழுந்ததை கவனிக்காமல் போலீசாருக்கு புகார் அளித்திருப்பது போலீசாரின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு தொற்றிக் கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Big twist in jewelry theft incident in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->